திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2018 (15:26 IST)

நித்யானந்தா சிஷ்யைக்கு செருப்படி கொடுக்கும் வீடியோ

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. 
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து அமைப்பினர் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் பாரதிராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் எச்.ராஜாவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ எனவும் எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்றும் அச்சம் தெரிவித்தார்.
 
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ தரம் தாழ்ந்த விமர்சனத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. வைரமுத்துவைப் பற்றியும், அவரது குடும்பத்தாரைப் பற்றியும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்நிலையில் நித்யானந்தா சிஷ்யைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: Oranje talkies