கேஒய்சி தகவல் அளிக்க வங்கிக்கு செல்ல வேண்டுமா? ரிசர்வ் வங்கி தகவல்!
வங்கி வாடிக்கையாளர் அனைவரும் கேஒய்சி என்ற உங்கள் வாடிக்கையாளர் தனிப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்பதும் அப்போது தான் வங்கியில் கணக்கு தொடங்க முடியும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வங்கிகள் அளிக்கும் சேவைகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யும் இந்த கேஒய்சி விவரங்களை பூர்த்தி அல்லது அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
இந்த நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகளுக்கு நேரடியாக சென்று கேஒய்சி அப்டேட் செய்வதற்கு பதிலாக மின்னஞ்சல், தொலைபேசி, ஏடிஎம், நெட் பேங்கிங் அல்லது கடிதம் மூலம் சமர்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Siva