மத்திய அரசின் திட்டத்தை ஏற்க மறுப்பு.! தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.2,000 கோடி நிதி நிறுத்தம்..!!
மத்திய அரசின் பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ் திட்டத்தை அமல்படுத்த மறுப்பு தெரிவித்ததால், தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அரசு பள்ளிகளை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து, புதிய கல்வி கொள்கையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்துவதே” பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டம் கொண்டுவரப்பட்டது.
புதிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு தொடங்கும் பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் “பி.எம். ஸ்ரீ ஸ்கூல்ஸ்” திட்டத்தை ஏற்காததால் பள்ளிருங்கிணைந்தமான எஸ்.எஸ்.ஏ.விற்கு ஆண்டுதோறும் ஒதுக்கும் ரூ.2,000 கோடி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.