பிரபல வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி
விதிகளை மீறி செயல்பட்டதற்காக ஐசிஐசிஐ வங்கிக்கும், கோடக் மஹிந்திரா வங்கிக்கும் இந்திய ரிசர் வங்கி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளும், ஹெச்.டி.எஃப்.டி, ஐசிஐசிஐ, சிட்டி யூனியன் பேங்க், கோடக் மஹிந்திரா உள்ளிட்ட தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது, வாடிக்கையாளர்களிடம் வட்டி மற்று பிற கட்டணங்களை வசூலிப்பதில் குளறுபடி ஆகிய காரணங்களுக்கான ஐசிஐசிஐ மற்றும் கோடக் மஹிந்திரா ஆகிய வங்கிகளுக்கு தலா ரூ.12.19 கோடி மற்றும் ரூ.3.95 கோடியும் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.