செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (17:44 IST)

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்ய வரதட்சணை கேட்ட வாலிபர்!

பலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்ய வரதட்சணை கேட்ட வாலிபர்!

கான்பூரில் வாலிபர் ஒருவார் ஒரு இளம்பெண்ணை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய அவர் 5 லட்சம் ரூபாய் வரதட்சனையாக கேட்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி பாண்டா மாவட்டம் பிசாந்தா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது உறவுக்கார பெண்ணை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த உறவுக்கார பெண்ணின் கணவனின் தம்பி அந்த இளம்பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலாத்காரம் செய்த நபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர்களது திருமணம் மே 20-ஆம் தேதி நடைபெறும் எனவும் தீர்ப்பளித்தனர்.
 
இந்நிலையில் திருமணம் நெருங்கியபொது தனக்கு வரதட்சனையாக 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என அந்த வாலிபர் திருமணத்தை நிறுத்தினார். இதனையடுத்து வரதட்சனை கொடுக்க மறுத்த பெண் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
அந்த புகாரின் அடிப்படையில் வாலிபர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறையினர்,  வரதட்சணை கொடுமை, மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.