வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (11:26 IST)

மாநிலங்களவையை முடக்கிய அதிமுக: காவிரியை கையிலெடுத்து கூச்சல்!

மாநிலங்களவையை முடக்கிய அதிமுக: காவிரியை கையிலெடுத்து கூச்சல்!

ரூபாய் நோட்டு செல்லாது, காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.


 
 
மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவை இன்று மீண்டும் கூடியது. இன்று கூட்டம் தொடங்கியதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக மாநிலங்களவையில் அமளி காரணமாக 11.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்று மாநிலங்களவை தொடங்கியதும் அதிமுக உறுப்பினர்கள் காவிரி விவகாரத்தை கையிலெடுத்து கோஷமிட்டனர். அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
 
அதே நேரத்தில் மற்ற எதிர் கட்சிகளும் ரூபாய் நோட்டுகள் அறிவிப்பை கையிலெடுத்து கோஷம் எழுப்பினார். இதனால் அவையை நடத்த முடியாமல் அவைத்த தலைவர் குரியன் 11.30 வரை ஒத்திவைத்தார்.