வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (08:36 IST)

காங்கிரஸில் திறமைக்கு மதிப்பு இல்ல..! – சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக ஜோதிராதித்ய சிந்தியா!

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக கூறிய சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பார்க்க சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராஜஸ்தான் திரும்பியுள்ளார். முதல்வர் அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி வரும் சச்சின் பைலட் இன்று நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்திலும் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னர் காங்கிரஸில் இருந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ள ஜோதிராதித்ய சிந்தியா “ராஜஸ்தான் துணை முதல்வரான எனது சகா சச்சின் பைலட் முதல்வர் துன்புறுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. காங்கிரசில் திறமைக்கு மதிப்பில்லை, சிறிதளவும் நம்பகத்தன்மை இல்லை என்பதையே இது காட்டுகிறது” என கூறியுள்ளார்.

இதனால் ஜோதிராதித்ய சிந்தியா போல சச்சின் பைலட்டும் பாஜகவில் இணைந்துவிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்துள்ளது.