சென்னை- பெங்களூரு ... பறக்க போகுது 10 நகரங்களில் புல்லட் ரயில்!

bullet
vm| Last Updated: சனி, 23 பிப்ரவரி 2019 (12:45 IST)
சென்னை-பெங்களூரு, மும்பை - டெல்லி உள்பட பத்து புதிய வழித்தடங்களில்  புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சீனா, ஜப்பானில் புல்லட் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதேபோல் இந்தியாவிலும் புல்லட் ரயில் ஓட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.  
 
இதற்காக விரிவான திட்டமிடுதலை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
 
டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால், அமிர்தசரஸ், அகமதாபாத் ஆகிய 6 வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. 
 
இதேபோல் நாக்புர்-மும்பை மற்றும் பாட்னா-கொல்கத்தா வழித்தடத்திலும் புல்லட் ரயில்களை இயக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே மைசூர்- பெங்களூரு-சென்னை இடையே புல்லட் ரயில்கள் விடவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. 
 
எனவே மொத்தமாக நாடு முழுவதும் 10 வழித்தடங்களில் புல்லட் ரயில்கள் திட்டத்தை செயல்படுத்த  ரூ.10 லட்சம் கோடி  முதலீட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை  மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. 
 
2025 அல்லது 2026ம் ஆண்டில் திட்டம் நிறைவேறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயிலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :