சுற்றுலாவுக்கு வாடகைக்கு ரயில்கள் கிடைக்கும்! – ரயில்வேதுறை அறிவிப்பு!
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சுற்றுலாவுக்காக சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ”பாரத் கவுரவ்” என்ற திட்டத்தின் கீழ் சுமார் 190 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவுக்கு தனியார் நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதோடு அதற்கான வாடகையையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் பெறப்படும் நிலையில் பல்வேறு மாநிலங்களும் வாடகை ரயில்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருவதாக ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.