1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஜூலை 2018 (15:53 IST)

காரசாரமாய் பேசிவிட்டு கட்டியணைத்து கண்ணடித்த ராகுல்: பின்னணி என்ன?

தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை இணைந்து பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி ஆக்ரோஷமாக பேசி பாராளுமன்றத்தை அதிர வைத்தார். 
 
ராகுல்காந்தி பாஜக அரசுக்கும் எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் காட்டமான கருத்துகளை தெரிவித்தார். மோடி மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார். 
 
மேலும், பிரதமர் என் கண்ணைப்பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்றும் பேசினார்.
 
பின்னர் தனது பேச்சை முடித்த ராகுல் காந்தி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று மோடியை கட்டி அணைத்தார். இதை எதிர்பார்க்காத மோடி திரும்பிச்சென்ற ராகுலையின் கையைப் பிடித்து தன் அருகே இழுத்து அவர் பேசியதற்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கினார். 
 
இதன் பின்னர், ராகுல் தனது இருக்கைக்கு வந்து கண்ணடித்தார். தற்போது ராகுலின் பேச்சும், அவரது செய்கைகளும் வைரலாகி வருகிறது. இது குறித்து இணையவாசிகள் பலர் ராகுல் ஏதோ திட்டத்துடன் செயல்படுகிறார் காத்திருங்கள் மோடி என பதிவிட்டு வருகின்றனர்.