1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (11:40 IST)

ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு: 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Rahul
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் என்பதும் இந்த யாத்திரை சென்ற மாநிலங்கள் அனைத்திலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.
 
மேலும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் உள்பட பலர் இந்த யாத்திரையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை 145 நாட்கள் 3500 கிலோ மீட்டர் நடந்துள்ள நிலையில் நாளையுடன் இந்த யாத்திரை ஸ்ரீ நகரில் நிறைவடைய உள்ளது 
 
நாளைய நிறைவு நாளில் திமுக உள்பட 23 காட்சி தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
Edited by Siva