செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (18:51 IST)

டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி!

டெல்லியில் அரசு கொடுத்த வீட்டை ராகுல் காந்தி காலி செய்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனால் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. 
 
எம்பி பதவி பறிக்கப்பட்டதால் அவருக்கு அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பங்களாவை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி வீட்டிற்கு காலி செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் ராகுல் காந்தி அரசு பங்களாவை இன்று காலி செய்து விட்டதாகவும் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் லாரிய்யில் ஏற்றுக்கொண்டு செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் செய்திகள் வெளியானது. 
 
இருப்பினும் ராகுல் காந்தி அரசு பங்களாவை காலி செய்துவிட்டு எந்த வீட்டிற்கு குடியேறுகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
 
Edited by Siva