1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (11:29 IST)

மதங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்துகிறது பாஜக! – ராகுல்காந்தி!

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கிட்டத்தட்ட முடிவடைய உள்ள நிலையில் யாத்திரையின் நோக்கம் குறித்து ராகுல்காந்தி பேசியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி என பல மாநிலங்களை தாண்டி பயணித்து வருகிறார்.

100 நாட்களை தாண்டி நடந்து வரும் இந்த இந்திய ஒற்றுமை பயணம் விரைவில் முடிவடைய உள்ளது. இதன் நிறைவு விழாவிற்கு காங்கிரஸ் 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த யாத்திரை குறித்து பேசியுள்ள ராகுல்காந்தி “நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை சூழல் பரவி வருகிறது. ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மோத வைக்கிறது. ஆனால் நாங்கள் அன்பு, சகோதரத்துவ பாதையை நாட்டுக்கு காட்ட முயன்றோம். எனவேதான் இந்த யாத்திரையை தொடங்கினோம்.

வெறுப்பு, வன்முறை, வேலையில்லா திண்டாட்டம், விலவாசி உயர்வு உள்ளிட்டவை தான் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பவும், அதற்கு எதிராக போராடவும்தான் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

Edit By Prasanth.K