1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:55 IST)

இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-வது கட்டம்: குஜராத் முதல் மேகாலயா வரை தொடங்கும் ராகுல் காந்தி..!

Bharat Jodo Yatra
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தினார். முதல் கட்ட யாத்திரையை அவர் கன்னியாகுமரியில் தொடங்கி  காஷ்மீரில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை அவர் தொடங்க உள்ளார். இந்த யாத்திரையை குஜராத்தில் தொடங்கி மேகாலயா வரை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
செப்டம்பர் 7ஆம் தேதி  இரண்டாம் கட்ட யாத்திரை எப்போது தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைமை இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
அடுத்த ஆண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே முதல் கட்டாக யாத்திரை மிகப் பெரிய பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva