1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (10:35 IST)

என் தந்தையை இழந்தேன், ஆனால் என் நாட்டை இழக்க மாட்டேன்: ராகுல் காந்தி

Rahul Gandhi
வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலுக்காக எனது தந்தையை இழந்தேன் ஆனால் என் நாட்டை விட மாட்டேன் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி மறைந்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் வழிபட்ட ராகுல்காந்தி அதன் பின் தனது டுவிட்டரில் இதுகுறித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 
 
வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலுக்காக எனது தந்தையை இழந்தேன் அதற்காக என் அன்பான நாட்டை இழக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அன்பு வெறுப்பை வெல்லும் என்றும் நம்பிக்கை பயத்தை வெல்லும் மற்றும் நாம் ஒன்றாக வெல்வோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  அவரது இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாத யாத்திரையைத் தொடங்க உள்ளார் என்பதும் இந்த பாதயாத்திரையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது