1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 21 டிசம்பர் 2023 (07:36 IST)

ராகுல் காந்தி தான் பிரச்சனைக்கு காரணம்.. எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து மம்தா பானர்ஜி

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 150 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி தான் இதற்கு காரணம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ராஜ்யசபா தலைவரான ஜெகதீஷ் தன்கர் போல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்ததும் அதனை ராகுல் காந்தி வீடியோ எடுத்தது தான் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்றும்  மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  
 
பாராளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி அனுப்பிய எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம், இயல்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறோம். 
 
ராகுல் காந்தி எங்கள் கட்சி எம்பியை வீடியோ எடுக்காவிட்டால் இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. நீங்களும் என்னிடம் இந்த கேள்வி வைக்க மாட்டீர்கள் என்று தெரிவித்திருந்தார்.  
 
ராஜ்யசபா தலைவர் போல் மிமிக்ரி செய்ததை ராகுல் காந்தி வீடியோ எடுத்ததால்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என்று மம்தா பானர்ஜி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva