செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (07:21 IST)

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் என்றும் அவர் தனது செயலுக்கு மனநல ஆலோசனை பெற வேண்டும் என்றும் பாஜக எம் பி யும் நடிகையுமான கங்கனா ரனாவத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தி நேற்று பாராளுமன்றத்தில் பேசிய போது ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார் என்றும் அவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதாக பாஜகவினர் குற்றம் காட்டி வந்தாலும் எதிர்க்கட்சிகள் அவரது பேச்சை புகழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத் ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்றும் அவர் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி னாக மாறி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக கடவுள் சிவன் படத்தைக் காட்டி எனது இன்றைய உரையை  தொடங்குகிறேன், இந்த படத்தை இங்கே ஏன் காண்பிக்கிறேன் என்றால் இதில் உள்ள யோசனைகளை எதிர்க்கட்சிகளாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இது குறித்து தான் நடிகை கங்கனா ரனாவத்  எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளது பொறுப்பற்ற கருத்துக்கள் என்றும், ஒரு ராகுல் ஆக அல்ல இருவராக உள்ளார் என்றும் உடனடியாக அவர் மனநல ஆலோசனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு குடும்பத்தில் இருந்து ஏதாவது அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva