வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (16:40 IST)

மீனவர்களுடன் நடுக்கடலில் ராகுல்காந்தி! – மீனவர்களுக்காக உருக்கம்!

கேரளாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்ற ராகுல்காந்தி மீனவர்களுடம் மீன்பிடிக்க சென்றுள்ளார்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பல மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக தமிழகம் வந்த ராகுல்காந்தி சமையல் கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து உணவருந்தியது வைரலானது.

இந்நிலையில் தற்போது கேரளாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார் ராகுல்காந்தி. அங்கு கொல்லம்வாடி துறைமுகத்தில் இருந்து மீனவர்களுடன் கடலுக்குள் சென்ற அவர், மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க உதவிகள் செய்தார். பின்னர் அவருக்கு படகிலேயே மீனவர்கள் மீன் சமைத்து அளித்துள்ளனர்.

பின்னர் கரை திரும்பியதும் மீனவ மக்களிடம் பேசிய ராகுல்காந்தி கடலுக்குள் மீனவர்களோடு செல்லும்போதுதான் அவர்களது சிரமங்களை அருகில் பார்க்க முடிந்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.