திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:03 IST)

டெலிப் பிராம்ப்டர் சொதப்பியதால் தடுமாறிய மோடி… கலாய்த்த ராகுல் காந்தி!

டாவோஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மோடி இடையில் சில வினாடிகள் பேசாமல் தர்மசங்கடமான நிலைக்கு ஆளானார்.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்றது. அதில் ஆன்லைன் வழியாக இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

ஆனால் பேசிக்கொண்டிருக்கும் போதே சில நிமிடங்கள் நிறுத்திவிட்டார். அடுத்து என்ன பேசுவது என்று தெரியாதது போல நின்றார். மோடி காதுகளில் பொறுத்தி இருந்த டெலி ப்ராம்டர் சரியாக வேலை செய்ததால் இந்த தர்மசங்கடமான நிலை உருவானதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விமர்சனங்களும் கேலிகளும் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து டிவிட்டரில் ‘அந்த டெலி ப்ராம்டரால் கூட அவ்வளவு பொய்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை போல’ என கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார்.