1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (13:23 IST)

நீட் தேர்வு முறைகேடு.. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு கல்வி அமைச்சர் பதில்..!

இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது என பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு வைத்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
ராகுல் காந்தி பேசியபோது, ‘நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து லட்சக்கணக்கான மாணவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தியத் தேர்வு நடைமுறைகள் ஒரு மோசடி என்ற முடிவுக்கு இந்திய மாணவர்கள் வந்துள்ளனர்.
 
பணம் இருந்தால் இந்திய தேர்வு நடைமுறையை வாங்க முடியும் என்பது தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க அமைப்பு ரீதியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் எங்களுடைய கேள்வி’ என கூறினார்.
 
இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘2 முறை உச்சநீதிமன்றம் சென்று, 2 முறையும் பொதுவான நுழைவு தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்தியாவின் தேர்வு நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இப்படி பேசுவது துரதிருஷ்டவசமானது. போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது’ என்று கூறினார்.
 
Edited by Mahendran