1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (19:53 IST)

அவர்களை சும்மா விடக்கூடாது – ராகுல் காந்தி ஆவேசம்

உத்திர பிரதேசத்தில் கடன் பிரச்சினைக்காக பச்சிளம் குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரர்களை சும்மா விடக்கூடாது, அவர்களுக்கு உரிய தண்டனையை அளிக்க வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அலிகார் மாவட்டத்தில் ஒரு தம்பதியினர் ஜாகீத் என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். கடனை சொன்ன காலக்கெடுவுக்குள் கட்ட இயலாததால் அந்த தம்பதியினரின் 2 வயது குழந்தை ட்விங்கிள் ஷர்மாவை கடத்தி சென்றுள்ளனர் ஜாகித்தும் அவரது கூட்டாளியும். கடத்தி சென்ற குழந்தையை கண்களை நோண்டி, கழுத்தை நெறித்து கொன்றதோடு மட்டுமல்லாமல், துண்டு துண்டாக வெட்டி ஒரு பையில் போட்டு வீசியெறிந்துள்ளனர். இந்த படுபாதக செயலை கண்டித்து இந்தியாவெங்கும் உள்ள பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். பல சினிமா நடசத்திரங்களும் ட்விங்கிள் ஷர்மாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என வலியுறுத்தி ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் பதிவிட்டனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் “அலிகாரில் குழந்தையை கொடூரமாக கொன்றது உத்தர பிரதேசத்தை மட்டுமல்ல என்னையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வளவு கொடூரமாக இரக்கமற்று ஒரு குழந்தையை ஒரு மனிதன் கொல்வானா? இந்த குற்றத்தை தண்டிக்காமல் விடக்கூடாது. உத்தர பிரதேச போலீஸார் உடனடியாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்.” என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.