புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:52 IST)

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறாரா ராகுல்??

காங்கிரஸ் தலைவராக மீண்டும் பதவியேற்பதற்கு ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வந்தார்.

தற்போது சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், புதிய தலைவரை தேர்வு செய்யும் கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இதனால் ராகுல் காந்தியே மீண்டும் கட்சி தலைமைக்கு வரவேண்டும் என மூத்த தலைவர்கள் விரும்புகிறார்களாம்.

மேலும் இதற்கு ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 15 க்குள் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.