பதவி விலகுகிறார் பஞ்சாப் முதல்வர்: கவர்னரிடம் ராஜினாமா கடிதம்!
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து வரும் நிலையில் அக்கட்சியின் சரண்ஜித்சிங் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவாக உள்ளதை அடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
இன்று இரவு அல்லது நாளை காலை அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது
எனவே பஞ்சாப் மாநில காங்கிரஸின் முதல் வேட்பாளர் சரண்ஜித்சிங் என்று ராகுல்காந்தி அறிவித்தவுடன் கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக சித்துவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அதிருப்தி தான் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது