பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்: போராடும் விவசாயிகள் அதிரடி!!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக களம் காண முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாளை 100-வது நாளை எட்டுகிறது. இதுவரை மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 11 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக களம் காண முடிவு செய்துள்ளனர். அதாவது, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளில் எதிர் அணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.