திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (22:00 IST)

லடாக்கின் லே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!

Sonam Wangchuck
வரும் 7 ஆம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஏ.சி) நோக்கிச் சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி  நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்தியா நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்தும், சூரிய மின்சக்தித்  திட்டங்களுக்கான நில அபகரிப்பு உள்ளிட்ட சுற்றுச் சூழல் அச்சுறுத்தல்கள் பற்றி விழிப்புணர்வை பஷ்மினா அணிவகுப்பு நடத்த திட்டமிட்டிருந்தது.
 
அதன்படி, வரும் 7 ஆம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்.ஏ.சி) நோக்கிச் சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் பேரணி தலைமையில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது.
 
இப்பேரணி மூலமாக லடாக் வாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை  தெரியப்படுத்தவும் தேசம் முழுவதும் ஆதரவை பெறவும் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், லடாக்கின் லே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவை மீறினால் விளைவுகளை சந்திக்க   நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.