1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (15:21 IST)

அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் வழக்கு தொடர்ந்ததாக தெலுங்கானா உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு ஊழியர் மீது வழக்கு செய்ய உரிய முன் அனுபவதி பெறுவது அவசியம் என்று தெரிவித்து அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவித அனுமதியும் பெறாமல் அமலாக்கத்துறை அரசு ஊழியர்கள் மீது சரமாரியாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் இதற்கு சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது அமலாக்க துறைக்கு பெரும் பின்னாடி வாக்கு கருதப்படுகிறது.


Edited by Siva