செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (14:00 IST)

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ள நிலையில் கடைசி நேரத்தில் ரயிலின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

 

 

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புஜ் என்ற இடத்திற்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

 

360 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த ரயில் முழுவதும் ஏசி வசதியுடன் கூடிய முன்பதிவில்லா ரயில் ஆகும். இதில் 2 ஆயிரம் பேர் வரை பயணம் செய்ய முடியும். இன்று மாலை இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ள நிலையில், ரயிலின் பெயர் ‘வந்தே பாரத்’ என்பதிலிருந்து ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என மாற்றப்பட்டுள்ளது.

 

கடைசி நேரத்தில் ரயிலின் பெயர் மாற்றப்பட்டுள்ளதும், அதில் நமோ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K