செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (08:02 IST)

டிரம்பை சந்திக்க அமெரிக்கா செல்கிறாரா பிரதமர் மோடி? முக்கிய பேச்சுவார்த்தை..!

Modi Trump
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க பிரதமர் மோடி, அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது சில முக்கிய பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக சமீபத்தில் டொனால்ட் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, சட்டவிரோதமாக தங்கியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், இரண்டு நாள் பயணமாக பாரீஸ் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து வாஷிங்டன் செல்வார் என்றும் கூறப்படுகிறது.

பிப்ரவரி 12ஆம் தேதி மாலை அமெரிக்காவின் தலைநகருக்கு பிரதமர் மோடி செல்வார் என்றும், அதன் பின்னர் அவர் அதிபர் டிரம்பை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக, டொனால்ட் பதவியேற்ற பின்னர் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்க பயணம் இது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும், ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சகம், பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்காக வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva