திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 டிசம்பர் 2021 (11:26 IST)

ஒமைக்ரான் பரவல் அதிகமானதால் நாளை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

ஒமைக்ரான் பரவல் அதிகமானதால் நாளை பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!
 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒடிசாவில் முதல் முறையாக ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் ஒமைக்ரான் வேகமாக பரவியது. மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், தெலங்கானாவில் 14 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.அதேநேரத்தில் 77 பேர் குணமடைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ளதால் நாளை (23.12.2021) பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.