1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:10 IST)

விமானத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி...இறந்து பிறந்த குழந்தை....பயணிகள் அதிர்ச்சி

Flight
துருக்கியில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கர்ப்பிணி  ஒருவருக்கு  குழந்தை பிறந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டில் இருந்து மலேசியா நாட்டிற்கு  365 பயணிகளுடன் ஒரு விமானம் சென்றது. இந்த விமானம்  வானில் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு  கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

எனவே, இந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிரப்பட்டது. பெண்ணிற்கு விமான நிலையத்தில் இருந்த மருத்துவக்குழு விமானத்திற்குள் சென்று  மருத்துவம் பார்த்தனர். அவருக்கு குழந்தை இறந்தே பிறந்தது. இது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அந்த விமானத்தில் இருந்து இறந்த  சிசுவை வெளியேகொண்டுவர விமானப் பணியாளர்கள் மறுத்துவிட்டதாகவும் மலேசியாவுக்கு அந்த சிசுவை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.