1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (07:30 IST)

பாஜகவை வீழ்த்த கார்ப்பரேட் நிறுவனத்துடன் கைகோர்த்த மம்தா!

இந்தியா முழுவதும் தற்போது அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற தங்கள் கட்சியின் தொண்டர்களை விட கார்ப்பரேட் நிறுவனங்களைத்தான் அதிகம் நம்புகின்றனர். இதுகுறித்து விரிவாக 'எல்.கே.ஜி' மற்றும் 'என்.ஜி.கே' திரைப்படங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் என்பது தெரிந்ததே.
 
அரசியல் கட்சிகளை தேர்தலில் ஜெயிக்க வைப்பதில் இந்தியாவிலேயே பிரசாந்த் கிஷோர்தான் ஃபேமஸ். குஜராத் மாநில தேர்தலில் மோடி வெற்றி பெற்றதில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றது வரை இவரது பங்குதான் பெரும்பங்கு என கூறப்படுகிறது
 
எனவே சமீபத்தில் முடிந்த மக்களவை தேர்தலில் படுதோல்வியை அடைந்த மம்தா பானர்ஜி, வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க தற்போது பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மம்தாவும் கிஷோரும் சந்தித்து சுமார் 2 மணி நேரம் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கிஷோரும் மம்தாவுக்காக பணிபுரிய ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது
 
ஆனால் எத்தனை பிரசாந்த் கிஷோர்கள் களத்தில் இறங்கினாலும் அடுத்தமுறை மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடித்தே தீருவது என்று கங்கணம் கட்டியுள்ளது பாஜக. அமித்ஷாவின் ராஜதந்திர ஐடியாக்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர் தூசுதான் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். எனவே வரும் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது