1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (08:41 IST)

ஓய்வெடுக்கச் சென்றது பிரக்யான் ரோவர்.. மீண்டும் இயங்குமா?

Pragyan Rover
இந்தியாவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தில் இருந்த பிரக்யான் ரோவர் கடந்த சில நாட்களாக சந்திரன் குறித்த பல மர்மமான தகவல்களை அனுப்பி வந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் பிரக்யான் ரோவர் தனது பணிகளை நிறைவு செய்து ஸ்லீப் மோடுக்கு சென்று விட்டதாகவும்  செப்டம்பர் 22ஆம் தேதி மீண்டும் நிலவில் சூரிய ஒளி வரும்போது பிரக்யான் விழித்தெழும் என்றும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
 
நிலவில் அடுத்த 14 நாட்கள் சூரிய ஒளி இருக்காது என்பதால் பிரக்யான் ரோவர் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
நிலவின் அடுத்த சூரிய உதயம் செப்டம்பர் 22ஆம் தேதி வரும் நிலையில் அப்போது பிறகு மீண்டும் தனது பணிகளை தொடர வாய்ப்பு இருக்கிறது என்றும் ஒருவேளை மீண்டும் மீண்டும் இயங்காவிட்டால் இந்தியாவின் நிலவு தூதுவானாக நிலவிலேயே பிரக்யான் இருக்கும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது
 
Edited by Siva