ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (22:34 IST)

பெண் ராணுவத்தினர்களுக்கு ஆபாச வீடியோவை போட்டுக்காட்டிய உயரதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்

இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான எல்லை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எப் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தவறுதலாக பயிற்சி வீடியோவிற்கு பதில் ஆபாச வீடியோவை உயரதிகாரி ஒருவர் போட்டு காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி வகுப்புகள் நடப்பதுண்டு. இந்த பயிற்சி வகுப்புகளில் ஒரு பிரிவுதான் எல்லையை தாண்டி வரும் பகைவர்களை விரட்டுவது எப்படி என்பது குறித்த வீடியோ பயிற்சி ஆகும்.

கடந்த சனிக்கிழமை பஞ்சாப் மாநில பி.எஸ்.பி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி வீடியோ காண்பிக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது. லேப்டாப்பில் இருந்து நேரடியாக திரையில் ஒளிபரப்பான போது அதில் திடீரென ஆபாச படம் ஓடியது. இதனால் பெண் ராணுவத்தினர் அலறியடித்து வெளியே ஓடினர்.

பயிற்சி வீடியோவை ஒளிபரப்புவதற்கு பதிலாக அந்த அதிகாரி லேப்டாபில் இருந்த ஆபாச வீடியோவை திரையிட்டதால் வந்த குழப்பம் இது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்றும் பி.எஸ்.பி உயரதிகாரிகள் தெரிவித்தனர்.