வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (13:42 IST)

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா என்ற போலீஸ்காரர் ஆன்லைன் விளையாட்டில் அடிமையாகி, லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் அவர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கியதும், அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துவிட்டார்.

இந்த நிலையில், அவரின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்திருந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திடீரென கழிவறைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவருடைய உடலை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். அவருடைய சட்டைப் பையில் இருந்த உருக்கமான கடிதத்தில், "ஆன்லைன் ரம்மியால் அளவுக்கு அதிகமான பணத்தை இழந்தேன். மேலும், லட்சக்கணக்கில் கடன் வாங்கி, திருப்பித் தர முடியவில்லை. எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்த நிலையில், என்னால், என்னை திருமணம் செய்து கொள்ளும் பெண் பாதிப்பு அடைய கூடாது என்ற வகையில் தற்கொலை செய்து கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Edited by Siva