செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (12:30 IST)

கள்ள நோட்டுகளை விநியோகிக்கும் ஏடிஎம்: போலீஸ் விசாரணை!!

டெல்லி வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 
 
தெற்கு டெல்லியில் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கள்ள நோட்டுகள் வந்துள்ளது. அதில் ‘ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா’ என்று இருக்க வேண்டிய இடத்தில் ‘சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சிடப்பட்டு, ரிசர்வ் வங்கி கவர்னர் பெயர், அவருடைய கையெழுத்து, அசோக சக்கரம், வரிசை எண் என எந்த ஒரு பாதுகாப்பு அம்சங்களும் எதுமில்லாமல் இருந்தது.
 
இதனால் வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டுகள் வந்தது குறித்து டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதுபற்றி அறிந்த மத்திய நிதி இணை மந்திரி சந்தோஷ் கங்வார்,  வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டுகள் வந்தது எங்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த இச்செயலை திட்டமிட்டு யாரோ வைத்திருப்பதாகவே சந்தேகிக்கிறோம். எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். மேலும் கள்ள நோட்டுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.