திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (18:12 IST)

பெண் கையில் இருந்த அந்த ஓவியம்..! – காரை நிறுத்த சொன்ன பிரதமர் மோடி!

இமாச்சல பிரதேசம் சென்ற பிரதமர் மோடி பெண் ஒருவர் வைத்திருந்த ஓவியத்தை கண்டதும் காரை நிறுத்த சொன்ன சம்பவம் வைரலாகியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் சரியாக 8 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். அப்போது பெண் ஒருவர் பிரதமர் மோடியின் தாயாரை ஓவியமாக வரைந்து அவரிடம் கொடுப்பதற்காக காத்திருந்தார். அதை கண்டதும் தனது காரை நிறுத்திய பிரதமர் மோடி அந்த பெண்ணிடம் இருந்து ஓவியத்தை பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.