வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (09:15 IST)

நள்ளிரவில் ரயில்வே ஸ்டேஷனில் தோன்றிய பிரதமர் மோடி! – வியந்து போன பயணிகள்!

உத்தர பிரதேசத்தில் காசி விஸ்வநாதர் கோவிலை திறந்து வைக்க சென்ற பிரதமர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் கோவிலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டார். அவர் கங்கையில் நீராடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பின்னர் நேற்று வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சென்று பிரதமர் பார்வையிட்டார். அப்போது நள்ளிரவு சமயத்தில் பிரதமர் மோடி அங்குள்ள ரயில் நிலையத்தை பார்வையிட சென்றுள்ளார். பிரதமரை அங்கு கண்டதும் மக்கள் பலர் கையசைத்துள்ளனர். அவர்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடி அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “ரெயில் பயணங்களை இணைப்பதுடன், தூய்மை, நவீன மற்றும் பயணிகளுக்கான நண்பனாக ரெயில்வே நிலையங்கள் செயல்படுவது உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என கூறியுள்ளார்.