திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 ஜூன் 2020 (15:05 IST)

ஹரே மித்ரோ!! மீண்டும் வருகிறார் மோடி: எப்போ தெரியுமா?

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், நான்கு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்பதுமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சீன எல்லையில் நடந்த மோதல் குறித்தும் அதன் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். வரும் 19 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து நாட்டு மக்களிடம் வரும் 21ஆம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலின் போது சீனாவுடனான பிரச்சனை குறித்தும் கொரோனா குறித்தும் ஊரடங்கு நிலைபாடு குறித்தும் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.