திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (16:28 IST)

பிரதமர் மோடி, 27,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி உலக சாதனை !

உத்தரபிரதேசம் மாநிலம், பிரக்யாராஜில் மூத்த குடிமக்கள் மாற்றுத் திறனாளிகள் என 27ஆயிரம் பேருக்கு 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கி பிரதமர் மோடி நிகழ்வு உலக சாதனையாகப் பாராட்டப்படுகிறது.
 
மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய கருவிகள் சக்கர நாற்காலிகள் என 56 ஆயிரம் உதவிப் பொருட்கள் மூத்த குடிமக்களுக்கான முகாமில் வழங்கப்பட்டன.
 
நலத்திட்ட உதவிகளை பெற்றவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். 
 
மேலும், ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், அதிக எண்ணிக்கையிலான சக்கரநாற்காலிகள் ஒரே இடத்தில் வைத்து விநியோகம் செய்வது, ஆகிய சாதனைகளை இந்த முகாம்  சாதனைப் படைத்துள்ளது.