வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (08:49 IST)

உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு.. சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை..!

Modi
இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும். உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும் என 78வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

பதினோராவது முறையாக டெல்லியில் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் பிரதமர் மோடி இன்று தனது சுதந்திர தின உரையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவை பாதுகாக்க, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு பலர் உழைத்து வருகின்றனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள் தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் இந்தியாவின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்திய நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர் கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும்

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்றால் உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்க வேண்டும். உலகளவில் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற புகழை இந்தியா விரைவில் அடையும். இந்திய நீதித்துறையில் நாட்டு மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்

Edited by Siva