புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 மார்ச் 2021 (13:32 IST)

பிரதமர் மோடி குஜராத் பயணம்! – மறைக்கப்பட்ட குடிசைகள்!

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரது வருகையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அகமதாபாத் வழியாக செல்லும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அகமதாபாத் சாலையோரமாக உள்ள குடிசைப்பகுதிகள் அலங்காரங்களால் மூடப்பட்டுள்ளது.

முன்னதாக அதிபர் ட்ரம்ப் வருகையின்போது குடிசைகளை மறைக்க சுற்றுசுவர் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது ஸ்க்ரீன் அமைத்து மூடியுள்ளது வைரலாகியுள்ளது.