மோடி ஜின்பின்ங்கிற்கு வழங்கிய பரிசு பொருட்கள் என்னென்ன??
பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு வழங்கிய பருசு பொருட்கள் என்னென்னவென தகவல் வெளியாகியுள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு வரலாற்று சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு மத்தியில் எவ்வித ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகாவிட்டாலும், சில பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிகிறது.
இந்நிலையில், சீன அதிபர் ஜின்பிங் தமிழகத்தில் இருந்து சீனா திரும்பிய போது மோடி அவருக்கு சில பரிசுகளை வழங்கினார். ஆம், தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் பொருட்களை சீன அதிபர் ஜின்பிங்கிற்கு பரிசாக வழங்கினார் மோடி.
தறோது அந்த பரிசுகள் என்னென்ன என தகவல் வெளியாகியுள்ளது. பிரசித்தி பெற்ற நாச்சியார்கோவில் அன்னம் விளக்கு, தஞ்சாவூர் சரஸ்வதி ஓவியம், சிறுமுகை நெசவாளர்களால் நெய்யப்பட்ட சிவப்பு நிற, ஜின்பிங் முகம் பதித்த பட்டு சால்வையும் ஜின்பிங்கிற்கு பரிசளிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.