திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (18:12 IST)

இந்தியா இப்போது நிலவில் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

இந்தியா அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம் இன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய பிரதமர் மோடி இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது என்று தெரிவித்தார். 
 
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் என்றும் இந்தியா இன்று உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி  இந்த பெருமை ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். 
 
தென்னாப்பிரிக்காவில் நான் இருந்தாலும் எனது எண்ணம் முழுவதும் சந்திராயன் 3 தரை இறங்குவதில் தான் இருந்தது என்றும்  அவர் கூறினார்.  நமது கண் முன்னே இந்தியா வல்லரசாகி உள்ளது என்று கூறிய பிரதமர் மோடி  இந்த சாதனையை படைக்க உதவிய ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran