திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (19:44 IST)

அமைச்சரவையில் அனைவரும் புதுமுகங்கள்- முதல்வர் பினராயி விஜயன் அதிரடி

கேரளத்தில் இடதுசாரி கூட்டணிக்கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் கேரள முதல்வராக பினராஜி விஜயன் இரண்டாம் முறை பதவியேற்க உள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் சமீபத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது.

கேரளாவின் வரலாற்றிலேயே எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்ததில்லை. இந்நிலையில் புதிதாக பதவி ஏற்க உள்ளதால் தனது பழைய  அமைச்சரவையைக் கலைக்க வேண்டி தன்னுடைய முதல்வர் பதவியை சமீபத்தில்  ராஜினாமா பினராயி விஜயன்.

இந்நிலையில், வரும் மே 20 ஆம் தேதி பினராஜி விஜயன் கேரள முதல்வராகப் பதவியேற்க உள்ளார். அவருடம் 21 அமைச்சர்கள் பதவி ஏற்க வுள்ளனர். மேலும், இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, சுமார் 500 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகிறது.

கொரொனா காலத்தில் முதல்வர் பினராஜி விஜயன் சிறப்பாகச் செயல்பட்டதாக பலரும் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கேரள மாநில அமைச்சரவையில் முதல்வர் பினராயி விஜயனைத் தவிர மற்ற அனைவரும் புதியவர்கள் என தகவல்கள் வெளியாகிறது.

மேலும், மொத்தம் உள்ள அமைச்சர்களில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 அமைச்சர்களும், அதன் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 அமைச்சர்களும், , மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் , கேரள காங்கிரஸ்( எம்) ஆகிய கட்சிகளுக்கு  தலா ஒரு அமைச்சர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.  21 அமைச்சர்களுக்கு மேல் இடம் கொடுக்க முடியாது என்பதால் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு  சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.