செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2024 (17:50 IST)

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பாதுகாவலரின் மகன் போட்டி.. சுயேட்சையாக களமிறங்குகிறார்.+

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்கள் ஒருவரின் மகன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் ஆகிய இரண்டு பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற இரு பாதுகாவலர்களின் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் 
 
பஞ்சாப் மாநிலம் பரித்கோட் தொகுதியில் அவர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் கடந்த 2009, 2014, 2019 ஆகிய மூன்று மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டார் என்பதும் மூன்று தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது நான்காவது முறையாக அதே தொகுதியில் அவர் சுயசையாக போட்டியிடும் நிலையில் இந்த முறை அவர் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran