1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (14:57 IST)

நடிகையை தொடர்ந்து அவரது தோழியும் தற்கொலை! – மேற்கு வங்கத்தில் தொடர் அதிர்ச்சி!

Manjusha
கொல்கத்தாவில் வங்க மொழி நடிகையான பிதிஷாவை தொடர்ந்து அவரது தோழியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளத்தில் பிரபல மாடலாகவும், பட நடிகையாகவும் இருந்து வந்தவர் பிதிஷா. கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்த பிதிஷா கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிதிஷாவின் தோழியான மற்றொரு வங்காள மாடல் மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பிதிஷா தற்கொலை செய்து கொண்ட பின்னர் மிகவும் மன வருத்தத்தில் இருந்த மஞ்சுஷா தொடர்ந்து பிதிஷா பற்றியே பேசி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.