புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 மே 2021 (09:15 IST)

பாஜக தொடங்கிய கணக்கை முடித்துவிட்டோம்.. மக்களுக்கு நன்றி! – பினராயி விஜயன்!

கேரள சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது சிபிஐ (எம்).

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் கேரளாவில் தற்போது ஆளும் இடதுசாரி சிபிஐஎம் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. எதிர்கட்சியான காங்கிரஸ் 41 இடங்களில் வென்றுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கேரளாவில் ஒரு வெற்றி கூட அமையவில்லை. இந்நிலையில் தேர்தல் வெற்றி குறித்து பேசியபோது முதல்வர் பினராயி விஜயன் “கடந்த 5 ஆண்டுகள் முன்பு பாஜக கேரளாவில் கணக்கை தொடங்கியது தற்போது நாங்கள் அதை முடித்து வைத்துள்ளோம்” என கூறியுள்ளார். மேலும் கட்சி வெற்றியை மக்களுக்கு சமர்பித்துள்ள அவர் வெற்றி பெற்றாலும் அதை இப்போது கொண்டாட நேரமில்லை என்றும், கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.