ரூ.42 லட்சத்திற்கு உணவுகளை ஆர்டர் செய்த நபர்- ஸ்விக்கி தகவல்
இந்த உலகம் நாளுக்கு நாள் நவீனமயம் ஆகிவருகிறது. எல்லா துறைகளிலும் முன்னேற்றமும், வாடிக்கையாளர்களை ஈர்க்க புது புது உத்திகளை கையாண்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது உபர், சோமாட்டோ, ஸ்விக்கி ஆகிய உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளரை நோக்கி விரைந்து சென்று டெலிவரி செய்ய ஆர்வத்துடன் இருந்தாலும், மக்களும் இதில் ஆர்டர் செய்து இருக்கும் இடத்தில் இருந்தே சாப்பிட விரும்புகின்றனர்.
இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு மட்டும் ரூ.42.3 லட்சத்திற்கு உணவுகளை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் துர்கா பூஜையின்போது 77 லட்சத்திற்கும் அதிகமான குலோப் ஜாமூன் விற்பனையாகியுள்ளதகவும், நவராத்தியியின் 9 நாட்களிலும், மசாலா தோசையே அதிகம் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.