செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (16:36 IST)

காங்கிரஸ் ஜெயித்துவிட்டதால் மின்சார கட்டணம் கட்ட மாட்டோம்.. மின் அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்..!

EB reading
காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் 200 யூனிட் மின்சார இலவசம் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதால் இனிமேல் நாங்கள் மின்சார கட்டணம் கட்ட மாட்டோம் என 200 யூனிட்டுகளுக்கு கீழ் பயன்படுத்தும் பொதுமக்கள் மின் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பதும்,  விரைவில் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கர்நாடக மாநிலத்தில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜலிகடே என்ற கிராமத்தில் மின் அதிகாரிகள் மின் கணக்கெடுப்பு எடுக்க வந்தபோது காங்கிரஸ் கட்சி தான் ஆட்சிக்கு வந்துவிட்டதே, இனிமேல் நாங்கள் மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என மின்கணக்கீடு எடுக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஆட்சி பதவியேற்று 200 யூனிட்டுக்கள் மின்சார இலவசம் என்று அரசாணை வெளியிட்ட பின்னர் தான் அது அமலுக்கு வரும் என்று மின் அதிகாரிகள் கூறியபோதிலும் அதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் 200 யூனிட்டுக்கு கீழ் இருக்கும் வீடுகளில் மின் கணக்கீடு எடுக்கக் கூடாது என வாதிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva