வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:24 IST)

ஓ.பி.எஸ். முதல் அமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லை: சுப்ரமணியன் சுவாமி

முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் ஓ.பன்னீர்செல்வம் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆளுநரிடம் பதவி ஏற்க கோரியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதம் நிர்பந்தம் செய்யப்பட்டதால் நடந்தது என்றும், சட்டசபையில் தான் பெரும்பான்மையை நிரூப்பிப்பேன் என்றும் ஆளுநரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் சந்தித்த ஆளுநர் தமிழக அரசியல நிலவரம் குறித்து மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவன கருத்துகளை கூறி வருகிறார்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளார். இதன்மூலம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.